பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 'சலார்' படம் உருவாகியுள்ளது. 'கேஜிஎஃப்' பட புகழ் பிரசாந்த் நீல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பல யூகங்களைகிளப்பி வருகிறது.
கேஜிஎஃப்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' உருவாகி வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகாந்தூர் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
சலார்' படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகயிருக்கிறது.
இந்நிலையில் 'சலார்' முதல் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசர் அப்படியே ‘கேஜிஎஃப்’ சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதே பின்னணியில் பில்டப் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. இதனால் 'சலார்' படம் கேஜிஎஃப் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்ற கருத்து இணையம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகின்றனர்.