பிரபல பின்னணி பாடகி ஜானகியின் ஒரே மகன் முரளி மரணமடைந்துள்ளார். உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாகத் தகவல் கூறுகிறது. பாடகி ஜானவி, சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்டதால் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார்.
விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடகியாக அறிமுகமானவர் தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடிக் கொண்டிருந்தார்.
இளையராஜா இசையிலும் பாடல்கள் பாடி வந்தவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள் பாடினார். 87 வயதாகும் ஜானகி அம்மா இப்போது பாடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டார், வீட்டிலேயே உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இத்துக்கச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.








