அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் டைட்டில் வெளியானதோடு, படம் தொடர்பான எந்த அப்டேட்யும் வெளியாகாமல் உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். 'லியோ' படத்திற்கான தனது ஷுட்டிங்கை விஜய் நிறைவு செய்துள்ள நிலையில், 'விடாமுயற்சி' படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது.
கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஏகே 62' படத்தின் 'விடாமுயற்சி' என்ற டைட்டில் மட்டும் வெளியானது. அதனை தொடர்ந்து படம் தொடர்பான எந்த அப்டேட்யும் வெளியாகாமல் உள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக 'துணிவு' படம் வெளியானது. எச். வினோத் இயக்கத்தில் வாங்கி கொள்ளையை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லராக இந்தப்படம் வெளியானது.
லைப்பேச்சு அந்தணன் 'விடாமுயற்சி' ஷுட்டிங் ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைரதபாத்தில் நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே மகிழ் திருமேனியின் முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்ட அஜித்தும், லைகா தரப்பும் ஒகே பண்ணிவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தடையற தாக்க, மீகாமன்ம தடம், கலகத்தலைவன் போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தை வைத்து படம் இயக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
அவரின் பாணியில் இந்தப்படமும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும்,'விடாமுயற்சி' படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.