சிப்பாங், ஜனவரி.17-
மலேசிய நடிகை நடியா கெசுமா, ஜெடாவிலுள்ள கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உம்ரா மற்றும் பல சர்வதேச சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கிய பயணம் ஒன்றில் இணைந்திருந்த நடியா, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெடாவில் தான் பாதுகாப்பாகத் தரையிறங்கி விட்டதாக தனது கணவருக்குத் தகவல் தெரிவித்த நடியா கெசுமா, அதன் பின்னர் தொடர்புக்கு வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதே வேளையில், அவர் சென்ற சுற்றுலா நிறுவனமும், லண்டன் செல்லும் விமானத்தில் நடியா கெசுமா தங்களுடன் இணையவில்லை என்று அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜெடா விமான நிலையத்தில் தான் ஒரு புதிய நபரைச் சந்தித்தாக நடியா கெசுமா தனது கணவருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதுவே அவரது கடைசித் தகவல் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது, நடியா கெசுமாவைத் தேடும் பணியில் ஜெடா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.








