Oct 18, 2025
Thisaigal NewsYouTube
காவாலா பாடலின் மூலமே கதையை கூறிய நெல்சன்..பாடலில் மறைந்திருக்கும் க்ளூஸ்..!
சினிமா

காவாலா பாடலின் மூலமே கதையை கூறிய நெல்சன்..பாடலில் மறைந்திருக்கும் க்ளூஸ்..!

Share:

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான திரைப்படமான ஜெயிலர் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் சூப்பர்ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் இணைந்தனர். இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்தது. இவர்கள் இணைந்த பிறகு ஜெயிலர் தற்போது பான் இந்திய படமாக மாறியது.

இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அனிருத்தின் இசையில் காவாலா என துவங்கும் இப்பாடல் தான் தற்போது வெளியாகிவுள்ளது.

படத்தின் நாயகியான தமன்னாவின் அசத்தலான நடனம், சூப்பர்ஸ்டாரின் மாஸ் என்ட்ரி என இப்பாடல் செம வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இப்பாடலை ரசிகர்கள் ரசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இப்பாடலை சிலர் டீகோட் செய்து வருகின்றனர்.

அதன் படி சில ரசிகர்கள் இப்பாடலை வைத்தே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என கணித்துள்ளனர். என்னவென்றால் படத்தில் ஜெய்லராக இருக்கும் ரஜினி ஜெயிலில் இருந்து தப்பித்த கைதிகளை பிடிக்க செல்கின்றார். அந்த சமயத்தில் தான் இந்த பாடல் வரும் என சிலர் கமன்ட் அடித்து வருகின்றனர்.

Related News

காவாலா பாடலின் மூலமே கதையை கூறிய நெல்சன்..பாடலில் மறைந்தி... | Thisaigal News