லோகேஷ் பிரபாஸை வைத்து ஒரு பான் இந்திய படத்தை இயக்கப்போகின்றார் என கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது.
சமீபகாலமாக பிரமாண்டமான திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரபாஸ் விரைவில் லோகேஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த தகவலை நடிகர் பிரபாஸ் மறுத்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் இணையும் எண்ணம் இப்போதைக்கு இல்லை எனவும், இதெல்லாம் வெறும் வதந்திதான் எனவும் கூறியுள்ளார் பிரபாஸ்.