சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி இருக்கிறது. நேற்று இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் அனைவரும் விமானம் மூலமாக கொச்சிக்குச் சென்று இருக்கின்றனர்.
சின்னத்திரை பிரபலம் சிவாங்கியின் அம்மா, பாடகி பின்னி கிருஷ்ணகுமார், விமானத்தில் ரஜினி மற்றும் நெல்சன் உடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஜெயிலர் 2ன் ஷூட்டிங் கேரளாவில் எங்கே நடக்க இருக்கிறது என்கிற தகவலும் வந்திருக்கிறது.
கேரளாவில் பெரிய நீர்வீழ்ச்சியான் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தான் ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற இருக்கிறதாம்.








