May 21, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூடு விபத்து: ஜோகூர் டத்தோ டான் லேக் காங் நினைவு திரும்பினார்!
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூடு விபத்து: ஜோகூர் டத்தோ டான் லேக் காங் நினைவு திரும்பினார்!

Share:

ஜோகூர் பாரு, மே.10-

தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோகூர் பெர்சத்து கட்சியின் முன்னாள் இணைத் தலைவர் டத்தோ டான் லேக் காங், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது நினைவு திரும்பியுள்ளதாக அதன் தகவல் பிரிவு தலைவர் பீட்டர் கூ கொங் எக் உறுதிப்படுத்தியுள்ளார். கோத்தா திங்கியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சியை முடித்து விட்டுத் தனது கைத்துப்பாக்கியைச் சுத்தம் செய்த போது, எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்ததில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜோகூர் மாநிலக் காவற்படைத் தலைவர் Datuk Ab Rahman Arsad தெரிவித்தார்.

தற்போது அவர் பேசும் நிலைக்கு முன்னேறியுள்ள போதிலும், உடல்நிலை இன்னும் பலவீனமாக இருப்பதால் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவற்படை ஒன்பது சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வரும் வேளையில், அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related News