Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பேஸ் திட்டம்: 86,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பேஸ் திட்டம்: 86,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை

Share:

உலகப் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த ‘பேஸ்’ திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி, சில்லறை வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட 5 முக்கிய துறைகளில் வேலை இழப்பு அபாயம் அதிகரிக்கலாம் என அமைச்சு கணித்துள்ளது. இதனை எதிர்கொள்ள, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இத்திட்டத்தின் மூலம் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெறவுள்ளனர் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இதற்காக, வேலை இழந்த 56 ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்களுக்கு மறுவேலைவாய்ப்பு மற்றும் நிதி உதவி வழங்க பெர்கேசோ மூலம் 580 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் மற்றும் கிக் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக எச்.ஆர்.டி கார்ப் மூலம் .100 மில்லியன் ரிங்கிட்டும் , பி-ஹெய்லிங் ஊழியர்களுக்காக பி.டி.பி.கே மூலம் 20 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மாணவர்கள் தொழில்பயிற்சி பெற டேலண்ட் கார்ப் மூலம் 10 மில்லியன் ரிங்கிட் மானியமும் வழங்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதியளித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

பேஸ் திட்டம்: 86,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுக... | Thisaigal News