Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானுக்கு யானைகள் விற்கப்பட்டனவா? – தைப்பிங் நகராட்சி மன்றம் மறுப்பு
தற்போதைய செய்திகள்

ஜப்பானுக்கு யானைகள் விற்கப்பட்டனவா? – தைப்பிங் நகராட்சி மன்றம் மறுப்பு

Share:

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து, ஜப்பானின் தென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு, அனுப்பப்பட்ட மூன்று யானைகள் தொடர்பான விவகாரத்தில், எந்தவித வர்த்தக பரிவர்த்தனையோ அல்லது பணப் பரிமாற்றமோ இடம்பெறவில்லை என்று தைப்பிங் நகராட்சி மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம், முழுமையாக உயிரியல் பூங்காக்களுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஒத்துழைப்பு திட்டம் மட்டுமே என்று நகராட்சி மன்றத் தலைவர் முகமது அக்மல் தஹ்லான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் யானைகள் விற்பனை, கொள்முதல் அல்லது நிதி பரிமாற்றம் எதுவும் இடம்பெறவில்லை என முகமது அக்மல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யானைகள் இடமாற்றமானது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் என சமூக ஊடகங்களில் கூறப்படும் ஊகங்கள் அனைத்தும், முற்றிலும் தவறானவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு