May 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸ் மதுபானம் வழங்குவது ஏன்? - முன்னாள் நிர்வாக இயக்குனர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் மதுபானம் வழங்குவது ஏன்? - முன்னாள் நிர்வாக இயக்குனர் விளக்கம்

Share:

மலேசிய ஏர்லைன்ஸ் உலகளாவிய விமான நிறுவனமாகச் செயல்படுவதால், வணிக ரீதியான நிலத்தன்மையை உறுதிப்படுத்தவே மதுபானங்களை தொடர்ந்து வழங்குகிறது என மலேசியா ஏவியேஷன் குரூப் முன்னாள் நிர்வாக இயக்குனர் இஷாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் நடத்திய அலைவரிசை ஒன்றில் பேசிய இஷாம் இஸ்மாயில் , பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் போன்ற அனைத்துலக விமான நிறுவன சகாக்களையும், பிரீமியம் வகுப்பு பயணிகளின் எதிர்பார்ப்புகளையும் புறக்கணிக்க முடியாது என்றார்.

எனினும், முஸ்லிம் பணியாளர்கள் ஹிஜாப் அணியவும், 'அமால்' சிறப்பு விமானப் பணியாளர்கள் லண்டன், டோக்கியோ போன்ற நகரங்களுக்குச் செல்லவும் மலேசிய ஏர்லைன்ஸ் வழிவகை செய்து இருப்பதை அவர்த சுட்டிக்காட்டினார்.

மேலும், ஈரான்-அமெரிக்கா இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்களால் விமான எரிபொருள் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் விமானத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News