Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.01-

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சய் குமார் ஜா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவினர், இன்று ஜுன் முதல் தேதி கோலாலம்பூருக்கு வருகை புரிந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள அண்மைய நிலவரங்கள் குறித்து விளக்குவதும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் பொதுவான போராட்டத்தில் மலேசியாவின் ஆதரவைப் பெறுவதும், பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதும் இந்தக் குழுவினரின் நோக்கமாகும்.

இக்குழுவினரின் வருகையையொட்டி மலேசியாவின் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், மெனாரா செண்ரல் விஸ்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் தன்மை குறித்தும் வருகை தந்துள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவினர் விளக்கம் அளித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை