சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த சம்பவங்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார். பாராங்கை ஆயுதமாக ஏந்திய நிலையில் முகமூடி அணிந்து கொண்டு இக்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹுசேன் ஒமார் இதனை குறிப்பிட்டார். ஆகக்கடைசியாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள், வீடு புகுந்து கொள்ளையிட்டதுடன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை களவாடிச் சென்றுள்ளதாக ஹுசேன் ஒமார் தெரிவித்தார். சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜோகூரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த 13 பேர் பிடிபட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


