பாலிங், மே.10-
பாலிங்கில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 45 வயது மெக்கானிக் ஒருவரின் வீட்டில், ஒரு துப்பாக்கி, ஒரு போலி கைத்துப்பாக்கி,180-க்கும் மேற்பட்ட தோட்டாக்களைக் காவற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது வீட்டின் சமையலறையிலும் பரண் பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக மாவட்டக் காவற்படைத் தலைவர் Supt Brandon Richard Joe தெரிவித்துள்ளார்.
அண்டை நாட்டிலிருந்து எல்லை வழியாக இந்த ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், போதைப்பொருள் பழக்கமும் கொண்ட அந்த நபரிடம் இவ்வளவு ஆயுதங்கள் எதற்காக இருந்தன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.








