Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இயந்திரப் படகு கவிழ்ந்த சம்பவம்: அனைவரும் பாதுகாப்பு ஜேக்கெட் அணியவில்லை
தற்போதைய செய்திகள்

இயந்திரப் படகு கவிழ்ந்த சம்பவம்: அனைவரும் பாதுகாப்பு ஜேக்கெட் அணியவில்லை

Share:

பெலாபுஹான் கிளாங், ஜூன்.07-

கோலக்கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் தஞ்சோங் ஹராப்பான் கடற்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இயந்திரப் படகு ஒன்று கவிழ்ந்த சம்பவத்தில், அதில் பயணித்த அனைவருமே பாதுகாப்பு ஜேக்கெட் அணியவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி S. விஜயராவ் தெரிவித்தார்.

அந்த இயந்திரப் படகை அதன் உரிமையாளரே செலுத்தியிருக்கிறார். கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள், கட்டாயமாக பாதுகாப்பு ஜேக்கெட் அணிந்திருக்க வேண்டும் என்று தாம் பலமுறை வலியுறுத்தி வந்ததையும் விஜயராவ் சுட்டிக் காட்டினார்.

சம்பந்தப்பட்ட இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஒரு சிறார் உட்பட மூவர் உயிரிழந்த வேளையில் கணவன், மனைவி இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் விஜயராவ் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்