Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தளத்தில் கிடந்த சடலம், பிரிட்டிஷ் பிரஜையே
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தளத்தில் கிடந்த சடலம், பிரிட்டிஷ் பிரஜையே

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

கோலாலம்பூர், பங்சார், லோரோங் மாரோஃப்பில் ஒரு கட்டுமானத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம், ஒன்பது நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையே என்று உறுதிச் செய்யப்பட்டது.

சவப் பரிசோதனைக்குப் பிறகு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படும் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

அந்த பிரிட்டிஷ் பிரஜையின் குடும்பத்தினர் கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் சடலத்தை அடையாளம் கண்டனர் என்று ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார்.

ஒரு பொறியிலாளரான 25 வயது ஜோர்டன் ஜோன்சன் டோயில் என்ற அந்த பிரிட்டிஷ் பிரஜை, மலேசியாவிற்குத் தனியொரு நபராகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார்.

அன்று இரவு பங்சாரில் உள்ள ஐரிஷ் மதுபான விடுதிக்கு அவர் சென்றிருந்த போது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்