Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

தங்காக், ஜூன்.10-

தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர், ஜோகூர், தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

33 வயது முகமட் கைருல் அஸ்மி இத்நின் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் லீ கிம் கியாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுன் 2ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தங்காக், தாமான் சஹாயாவில் உள்ள ஒரு வீடமைப்புப் பகுதியில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டமான 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனது 33 வயது மனைவி லேச்சா ஜுனுஸ் என்பவரைக் கொலை செய்ததாக அந்த நபர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →