Jun 6, 2026
Thisaigal NewsYouTube
டெக்குன் நேஷனல் மூலம் 4 லட்சம் தொழில்முனைவோருக்கு 15 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி – ஸ்டீவன் சிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

டெக்குன் நேஷனல் மூலம் 4 லட்சம் தொழில்முனைவோருக்கு 15 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி – ஸ்டீவன் சிம் அறிவிப்பு

Share:

தேசிய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான டெக்குன் நேஷனல் தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கௌரவிக்கும் வகையில், “டெக்குன் தேசிய பாராட்டு விழா 2026” நிகழ்ச்சியை நேற்று பாங்கி அவென்யூ மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தொடங்கி வைத்தார். மொத்தம் 246 பணியாளர்களுக்கு ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

அவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஸ்டீவன் சிம், 2026-ஆம் ஆண்டில் கூஸ்கோப் கீழ் செயல்படும் அமைப்புகள் மூலம் 15 பில்லியன் ரிங்கிட் நிதி, நாடு முழுவதும் உள்ள 4 லட்சம் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மட்டும் டெக்குன் நேஷனல் சுமார் 20,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 360 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கியுள்ளதாக கூறினார்.

அதேவேளை, டெக்குன் வெற்றி என்பது வெறும் எண்ணிக்கைகளில் மட்டுமல்ல; வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக-பொருளாதார முன்னேற்றம் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோர் வளர்ச்சியிலும் அதன் தாக்கம் தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மேலும் வலுப்படுத்த டெக்குன் தனது பங்களிப்பை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்