அம்பாங், ஜூன்.05-
தாம் பணியாற்றிய நகைக்கடையில் தங்க வளையலைத் திருடியதாக நம்பப்படும் அதன் பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பாங்கில் உள்ள நகைக் கடையின் பொறுப்பாளர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழம 38 வயதுடைய ஓர் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
தனது பாக்கெட்டில் வைத்திருந்த தங்க வளையலையும் அந்த சந்தேகப் பேர்வழியிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








