கோத்தா பாருவில் உள்ள ஏயோன் வணிக வளாகத்தில் பெண்களின் உள்ளாடைகள் உட்பட 491 ரிங்கிட் மதிப்புள்ள ஒன்பது ஆடைகளைத் திருடியதாக, 21 வயது ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
முகமது ஐடில் முஸ்தகிம் என்ற அந்த மெக்கானி, மாஜிஸ்திரேட் உஸ்மான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த மெக்கானிக் விசாரணை கோரியதைத் தொடர்ந்த அவர், 2,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.








