Jun 9, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கைகள் - அமைச்சர் பத்லினா சிடேக் தகவல்
தற்போதைய செய்திகள்

மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கைகள் - அமைச்சர் பத்லினா சிடேக் தகவல்

Share:

மாணவர்களும், பள்ளி ஊழியர்களும், தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, தற்போதைய சவால்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான பள்ளி நிர்வாக வழிகாட்டுதல்களில், மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் பத்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை கல்வி நிறுவன பாதுகாப்பு சீர்திருத்தக் குழுவின் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குழுவில் போலீசார் மற்றும் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான என்.ஐ.ஓ.எஸ்.எச் உள்ளிட்ட பல தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில், பள்ளி பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் உரிய கவனம் பெறுவதற்காக, அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளும் அக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பத்லினா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான மைலெசென் பி2 செக்கோலா (MyB2S) 2026 திட்ட தொடக்க விழாவில் உரையாற்றிய பத்லினா மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்