Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சித்ரவதை செய்த மாது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சித்ரவதை செய்த மாது, நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

சுபாங் ஜெயா, ஜூன். 09-

தனது காதலனுடன் சேர்ந்து, 4 மற்றும் 16 வயது இரு மகள்களுக்கு உணவு எதுவும் தராமல் சித்ரவதை செய்ததாகக் கூறப்படும் மாது ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை ஷா ஆலாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அவ்விரு பெண் பிள்ளைகளும் சமூக நல இலாகாவினால் மீட்கப்பட்டுள்ள வேளையில் 37 வயது மாதுவும், அவரின் 42 வயது காதலனும் கைது செய்யப்பட்டார்.

இரு பிள்ளைகளைச் சித்ரவதை செய்தது மற்றும் அவர்களைக் கைவிட்டது தொடர்பில் அந்த மாதுவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →