Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பேராக்: 4 மணி நேர கனமழை - சுங்கை சிப்புட்டில் வீடுகள் நீரில் மூழ்கின
தற்போதைய செய்திகள்

பேராக்: 4 மணி நேர கனமழை - சுங்கை சிப்புட்டில் வீடுகள் நீரில் மூழ்கின

Share:

பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் பகுதியில் பெய்த நான்கு மணி நேரத் தொடர் கனமழையால், கம்போங் லாசாவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் ஒரு மீட்டர் உயரம் வரை நீரில் மூழ்கின.

இன்று அதிகாலை 1.24 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்ட பொது தற்காப்பு படை, கம்போங் செனெய்ன், கம்போங் ஜோங் மற்றும் கம்போங் பாவோன் உள்ளிட்ட சுற்றுவட்டாரச் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

காலை 9 மணி நிலவரப்படி, இதுவரை தற்காலிக நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட சில குடியிருப்பாளர்கள் தங்கள் அண்டை வீட்டார் அல்லது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மழை ஓய்ந்து வானிலை சீராகியுள்ள நிலையில், பொது தற்காப்பு படையினர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

பேராக்: 4 மணி நேர கனமழை - சுங்கை சிப்புட்டில் வீடுகள் நீர... | Thisaigal News