Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பி40 இந்தியச் சிறுவர்களுக்கான செலிக் மதானி திட்டம் கல்வி உதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

பி40 இந்தியச் சிறுவர்களுக்கான செலிக் மதானி திட்டம் கல்வி உதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு

Share:

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா , இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தரமான ஆரம்பக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் 'செலிக் மதானி திட்டம் எனும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.

மடானி அரசாங்கத்தின் இந்த முன்முயற்சியின் கீழ், குறைந்த வருமானம் பெறும் B40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த 4 முதல் 6 வயது வரையிலான சிறுவர்களுக்குக் கல்விக்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

• பாலர் பள்ளி கட்டணம்: மாதம் RM150 வரை நிதியுதவி.

• காலை உணவு உதவி: மாதம் RM80 வரை நிதியுதவி.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியுள்ள பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் வரும் 2026 மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை மித்ராவின் படிவ இணைப்பின் வாயிலாகவோ அல்லது விளம்பரச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று மித்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்