Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எங்களுடன் சந்திப்பு நடத்துவீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எங்களுடன் சந்திப்பு நடத்துவீர்

கோலாலம்பூர், ஜூன்.01-

இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் இலக்குக்கு உரிய மக்களுக்கான பெட்ரோல் ரோன் 95 விற்பனை முறையை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக, தங்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்துமாறு எண்ணெய் நிலையங்கள் நடத்துநர் சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இலக்குக்கு உரிய பெட்ரோல் ரோன் 95 விற்பனை முறை எவ்வாறு நடத்தப்படுவது, யார் யாருக்கு இவ்வகை எண்ணெய்யை வழங்க முடியும், அதன் விலை நிர்ணயம் தொடர்பில் இதுவரையில் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் எண்ணெய் நிலையங்கள் பெரும் தடுமாற்றத்துடன் இருப்பதாக பூமிபுத்ரா எண்ணெய் நிலையங்கள் நடத்துநர் சங்கத்தின் செயலாளர் ஹானி ஜூலியா ஹாரோன் தெரிவித்தார்.

அரசாங்கம் கொண்டுள்ள உத்தேசத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, எண்ணெய் நிலைங்களின் நடத்துநர்களுடன் அரசாங்கம் சந்திப்பு நடத்துமானால், இது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று ஹானி ஜூலியா குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை