May 21, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் பிந்துலுவில் ரேபிஸ் தொற்றுக்கு நான்காவது நபர் பலி
தற்போதைய செய்திகள்

சரவாக் பிந்துலுவில் ரேபிஸ் தொற்றுக்கு நான்காவது நபர் பலி

Share:

சரவாக் மாநிலத்தில் இவ்வாண்டின் நான்காவது ரேபிஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

பிந்துலு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர், கடந்த மே 3-ஆம் தேதி உயிரிழந்ததாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அந்நபரை கடந்த பிப்ரவரி மாத மையப்பகுதியில் நாய்க்குட்டி ஒன்று கடித்ததாகவும், அதன் பிறகு அவர் எந்த சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும், காயத்தை ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக தண்ணீரால் மட்டும் கழுவியதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி, அவரது உடம்பில் ரேபிஸ் அறிகுறிகள் தெரிய வரத் தொடங்கவே, அன்றைய தினமே Bintulu மருத்துவமனையில் பரிசோதனையில் ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News