Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் அந்நியத்  தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டணச் சுமை இருக்கக்கூடாது:  / ஐ.எல்.ஓ. வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டணச் சுமை இருக்கக்கூடாது: / ஐ.எல்.ஓ. வலியுறுத்தல்

Share:

மலேசியாவிற்கு வேலை தேடி வரும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நலிவடைந்த பிரிவினர், வேலைவாய்ப்புக்கான கட்டணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர செலவுகளால் சுமைக்குள்ளாக்கப்படக் கூடாது என அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ வலியுறுத்தியுள்ளது.

நேர்மையான மற்றும் நெறிமுறைமிக்க வேலைவாய்ப்பு நடைமுறைக்கு இக்கொள்கை மிகவும் முக்கியமானது என ஐ.எல்.ஓ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கென 2019ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தரநிலையின்படி, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான எந்தவொரு கட்டணத்தையும் அவர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக மலேசியா இருதரப்பு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி விமானக் கட்டணம் உட்பட மலேசியாவில் ஏற்படும் செலவுகளை முதலாளிகளே ஏற்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டன.

எனினும், 2023ஆம் ஆண்டு முதல் முறையாக வேலை அனுமதியுடன் மலேசியா வந்த பல வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு, வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலைகள் அங்கு இல்லை என்ற அதிர்ச்சிகரமான புகார்கள் எழுந்துள்ளதாகவும் ஐ.எல்.ஓ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு