Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அனுமதியின்றி பன்றிகளை ஏற்றி வந்த லோரி தடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி பன்றிகளை ஏற்றி வந்த லோரி தடுக்கப்பட்டது

Share:

ஈப்போ, ஜூன்.04-

கால்நடை இலாகாவின் அனுமதியின்றி பன்றிகளை இடம் மாற்றம் செய்யும் வகையில் 66 பன்றிகளை ஏற்றிக் கொண்டுச் சென்ற ஒரு லோரி, சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தடுக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் பேரா, மஞ்சோங், லேகிர் அருகில் மேற்கு கடலோர நெடுஞ்சாலையான WCE-யின் 195.5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

அந்தப் பன்றிகள் பினாங்கிலிருந்து கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பன்றிகள் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு அனுமதியில்லை.

அதே வேளையில் அது தொடர்பாக எந்தவொரு விண்ணப்பத்தையும் சம்பந்தப்ட்ட பண்ணையிடமிருந்து தாங்கள் பெறவில்லை என்று பேரா மாநில கால்நடை இலாகாவின் இயக்குநர் டாக்டர் சைஃபுலிஸாம் அப்துல் காடீர் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்