Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இரு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கினர்
தற்போதைய செய்திகள்

இரு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கினர்

Share:

மெர்சிங், ஜூன்.03-

பள்ளி விடுமுறை நாளை குதூகலமாகக் கழிப்பதற்காக குடும்பத்தினருடன் கடற்கரைக்குச் சென்ற இரு உடன் பிறப்புகள், நீரில் மூழ்கி உயிரிழந்தது, அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சோகமாக்கியது.

மெர்சிங், புலாவ் மெந்திகியில், நேற்று திங்கட்கிழமை மாலை 4.25 மணியளவில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 15 வயது பெண் நூர் அவாதிவ் உடைய்மா முகமட் ஹிசாம் மற்றும் அவரின் 13 வயது சகோதரர் அஹ்மாட் உவாய்ஸ் அல் கார்னி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் அடையாளம் கூறினர்.

இவ்விருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பூலாவ் திங்கி படகுத் துறை வாயிலாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. விசாரணைக்கு ஏதுவாக பிரேதங்கள், கடல்சார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்