Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பள்ளி நிர்வாகக் கட்டிடம் சாம்பலானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பள்ளி நிர்வாகக் கட்டிடம் சாம்பலானது

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.10-

இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் கோலாலம்பூர், செராஸ், எஸ்எம் சயின்ஸ் அலாம் ஷா இடைநிலைப் பள்ளியின் நிர்வாகக் கட்டடம் அழிந்தது. இந்த விபத்து அதிகாலை 4.15 மணியளவில் ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படைப் பிரிவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழுந்து விட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பண்டார் துன் ரஸாக், ஜாலான் ஹங் துவா, செந்துல் ஆகிய மூன்று நிலையங்களைச் சேர்ந்த 7 தீயணைப்பு வண்டிகளுடன் 44 வீரர்கள் போராடினர்.

அந்த இடைநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் அறை, கூட்ட அறை, கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறை, ஆய்வியல் கூடம் மற்றும் இதர அறைகள் முற்றாக அழிந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →