Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் விவகாரம்: 6 பேர் மீது மானநஷ்ட வழக்கு
தற்போதைய செய்திகள்

ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் விவகாரம்: 6 பேர் மீது மானநஷ்ட வழக்கு

Share:

நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, வின்வெளி டிவி செய்தியாளர் நாகேந்திரன் வேலாயுதம் உள்ளிட்ட 6 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவிட்டதாக, வின்வெளி டிவி நாகேந்திரன், அவரது மகன் பிரவின் மற்றும் 'வின்விழி மக்கள் மீடியா' மீது புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக செகுபாட், சுரேஷ் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் மீதும் கோயில் நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விளக்கமளித்த கோவிலின் செயலாளர் டத்தோ ஆறுமுகம், "கோவிலின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இக்கோவில் சங்கப் பதிவிலாகாவான ROS கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நிர்வகிக்கப்படுகிறது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களைத் தவிர, கோவிலுக்கு என்று தனிப்பட்ட ஆலோசகர்கள் யாரும் இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், "கோவிலின் பெயருக்குக் களங்கம் விளைவிப்போர் மீது இனியும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும். தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்; சந்தேகம் இருப்பின் நேரடியாகத் தன்னைத் தொடர்பு கொள்ளலாம்" என்றும் டத்தோ ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு