Jul 6, 2026
Thisaigal NewsYouTube
4 வயது சிறுவன் மாடியிலிருந்து விழுந்து மரணம்: தாயார் மற்றும் சிற்றப்பா கைது
தற்போதைய செய்திகள்

4 வயது சிறுவன் மாடியிலிருந்து விழுந்து மரணம்: தாயார் மற்றும் சிற்றப்பா கைது

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 30 ஆவது மாடியிலிருந்து 4 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் தாயார் மற்றும் தந்தையின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியர்களான இருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் சிறுவனின் 27 வயது தாயாரும், தந்தையின் 25 வயது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த சிறுவனின் தந்தை உள்ளூரைச் சேர்ந்தவர். தாயார் இந்தோனேசியப் பெண்மணி ஆவார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்