Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியக் கடற்படைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஏவுகணைகளுக்கான உரிமங்கள் நார்வே வசம் உள்ளது - கேடிஏ தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியக் கடற்படைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஏவுகணைகளுக்கான உரிமங்கள் நார்வே வசம் உள்ளது - கேடிஏ தகவல்

Share:

மலேசிய கடற்படையின் கடலோரப் போர் கப்பல்களான LCS-க்கு வழங்கப்படவுள்ள ஏவுகணைகள் ஏற்றுமதிக்கான, அனுமதி முடிவுகள் அனைத்தும், நார்வே அரசாங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, அந்நாட்டின் காங்ஸ்பெர்க் தற்காப்பு மற்றும் விண்வெளி நிறுவனமான கேடிஏ விளக்கமளித்துள்ளது.

இது குறித்து கேடிஏ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஐவர் சிமென்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நார்வே அரசாங்கம் வகுத்துள்ள சட்ட விதிமுறைகளுக்கு இணங்கவே நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்றுமதி அனுமதி தொடர்பான முடிவுகளை நார்வே அதிகாரிகளே கையாளுகின்றனர் என்றும், நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் தாங்கள் முழுமையாகப் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் மலேசியாவின் குறிப்பிட்ட அனுமதி விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பிராந்திய நாடுகளுடனான நீண்டகால ஒத்துழைப்பை தொடர்ந்து பேணி பாதுகாக்கும் உறுதிப்பாட்டையும் அந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு