Jun 9, 2026
Thisaigal NewsYouTube
மாஸ்கோ சிறப்புப் பயணம் நிறைவு: நாடு திரும்புகிறார் மாமன்னர் சுல்தான் இப்ராகிம்
தற்போதைய செய்திகள்

மாஸ்கோ சிறப்புப் பயணம் நிறைவு: நாடு திரும்புகிறார் மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

Share:

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தமது அதிகாரப்பூர்வ மாஸ்கோ பயணத்தை நிறைவு செய்து மலேசியாவிற்குத் திரும்புகிறார்.

மன்னரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவின்படி, அவரது தனியார் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் வினுகோவோ-2 சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கடந்த மே 6-ஆம் தேதி, மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்ட சுல்தான் இப்ராகிம், அங்கு கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த இந்த அழைப்பானது, மலேசியாவுக்கு ரஷ்யா அளிக்கும் உயர்ந்த மரியாதையும், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுப்பெற்று வருவதன் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகின்றது.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்