Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மரணத் தண்டனை சட்டத்தின் கீழ் ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மரணத் தண்டனை சட்டத்தின் கீழ் ஆடவர் மீது குற்றச்சாட்டு

பொந்தியான், ஜூன்.04-

போதைப் பொருள் கடத்தியது தொடர்பில் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஆடவர் ஒருவர், ஜோகூர், பொந்தியான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயது லாவ் கியாட் லிம் என்ற அந்த நபர், கடந்த மே 21 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் பொந்தியான், தாமான் முத்தியாராவில் உள்ள ஒரு வீட்டில் 6 கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருளைக் கடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் அரினா அஸ்மின் அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயள் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர பொருள் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை