Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தேசிய தரவு பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கானது நிர்வகிக்க தேசிய தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டுள்ளது- கோபிந்த் சிங் டியோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய தரவு பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கானது நிர்வகிக்க  தேசிய தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டுள்ளது- கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், ஜூன்.03-

இலக்கவியல் அமைச்சு, இலக்கவியல் தரவுப் பகிர்வுக்கான கொள்கையை விரைவில் வெளியிடும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு தரவுப் பகிர்வு சட்டம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததை அடுத்து இந்தக் கொள்கை வெளியிடப்படுகிறது.

தனி மனித தரவு என்பது இரகசியமாகவும், முறையாகவும் பாதுகாக்கப்பட வேண்டியது. இதனைக் கருத்தில் கொண்டு, மக்களின் தரவுகளை நிர்வகிக்க தேசியத் தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
தனது தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில், நாட்டிலுள்ள முக்கிய அமைச்சுகளிலிருக்கும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஆக அந்தந்த அமைச்சுகளின் தரவுகள் முறையாகவும், துல்லியமாகவும் இலகுவாகவும் கையாள இந்த தேசியத் தரவு பகிர்வு ஆணைய குழு வழிகாட்டும். அதன் வழி தரவுப் பகிர்வுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என கோபிந்த் சிங் டியோ கூறினார்.

தேசியத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பகிரப்படும் தரவு செயல்பாடுகள் அந்ததந்த அமைச்சுக்கேற்ப இலகுவாகவும், பாதுகாப்பானாதாகவும், சட்டத்திட்குட்பட்டதாகவும், முறையானதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய தேசியத் தரவு பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை