சுமார் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கடந்த நான்கு நாட்களாக முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிஸி ரம்லியிடம் நடத்தப்பட்டு வந்த விசாரணை நேற்று நிறைவு பெற்றது.
அவ்விசாரணைகள் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் சுமூகமாகவும், மிகவும் தொழில்முறையாகவும் நடத்தப்பட்டதாக ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் விசாரணை நிறைவடைந்த நிலையில், நான்கு நாட்களில் மொத்தம் 131 பக்கங்களுக்கு சமமான அனைத்து வாக்குமூலங்களும் முழுமையாக பதிவு செய்யப்பட்டதாக ரபிசி ரம்பி குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்ற விசாரணையில், நிதிசார் பரிவர்த்தனைகளை விட, கூட்டங்கள், ஆவணங்கள் மற்றும் அது தொடர்பான குறிப்புகள் உள்ளிட்ட நடைமுறை சார்ந்த விவகாரங்களிலேயே கவனம் செலுத்தப்பட்டதாகவும் ரபிசி தெரிவித்துள்ளார்.








