Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிலிக்கோன் தீவுடன் தென் பினாங்கிற்கு பாலம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலிக்கோன் தீவுடன் தென் பினாங்கிற்கு பாலம்

ஜார்ஜ்டவுன், ஜூன்.06-

சிலிக்கோன் தீவுடன் தென் பினாங்கை இணைப்பதற்கு 380 மீட்டர் நீளம் கொண்ட பாலம் ஒன்று நிர்மாணிக்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட பாலம், வரும் 2028 ஆம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிலிக்கோன் தீவுக்கும், சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா பாலம் அல்லது இரண்டாவது பினாங்கு பாலத்திற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வியூகக் கட்டமைப்பு முயற்சியான பான்-ஐலட்ன் லிங்க் 2A திட்டத்தின் ஒது முக்கிய அங்கமாக நான்கு வழித் தடங்களைக் கொண்ட இந்த பாலம் விளங்கும் என்று சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த மாதம் தொடங்கும். இதன் நிர்மாணிப்புப் பணியின் முதல் கட்டம் 2027 ஆம் ஆண்டு மத்தியப் பகுதியில் நிறைவடையும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை