Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய ஊடகவிலாளர் மன்ற நிலவரம், ஹவானா தினத்தில் அறிவிக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய ஊடகவிலாளர் மன்ற நிலவரம், ஹவானா தினத்தில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன்.03-

மலேசிய ஊடகவியலாளர் மன்றம் தொடர்பான ஆகக் கடைசியான நிலைவரங்கள் குறித்து வரும் ஜுன் 14 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய ஊடகவியலாளர்கள் தினமான Hawana (ஹவானா) நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.

ஒரு தெளிவான நோக்கத்தின் அடிப்படையில் மலேசிய ஊடகவியலாளர் மன்றம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, வெளியிடப்படக்கூடிய செய்திகளில் ஊடகவியலாளர்கள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது, ஊடகங்களுக்கு எதிராக பொதுமக்கள் அளிக்கக்கூடிய புகார்கள், முறையான இடத்தை சென்றடைவதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுக்காக மலேசிய ஊடகவியலாளர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டத்தோ பாஃமி விளக்கினார்.

2024 ஆம் ஆண்டு மலேசிய ஊடகவியலாளர் மன்றம் மீதான சட்டத்தை இயற்றும் மசோதா, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் டத்தோ பாஃமி சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை