May 21, 2026
Thisaigal NewsYouTube
அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் கல்லூரி மாணவர் பலி
தற்போதைய செய்திகள்

அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் கல்லூரி மாணவர் பலி

Share:

கெடா, சுங்கை பட்டாணி, பண்டார் ஸ்ரீ அஸ்தானா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை சுமார் 4:50 மணியளவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பலியானவர் கல்லூரி மாணவரான அமிர் ஹம்சா சம்சுல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடியபோது, வீட்டின் மேல்தளத்தில் அந்த இளைஞர் உயிரழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த விபத்தில் அவரது 54 வயது தந்தை சம்சுல் கைருதீன் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டின் முன்பகுதியில் தொடங்கியதாகக் கருதப்படும் இந்தத் தீ, வீட்டின் கட்டடப்பகுதியை 80 விழுக்காடு சேதபப்படுத்தியுள்ளது.

Related News