Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர்களின் உரிமையைத் தற்காப்பதில் துருக்கியுடன் மலேசியா உறுதியுடன் நிற்கும் – பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர்களின் உரிமையைத் தற்காப்பதில் துருக்கியுடன் மலேசியா உறுதியுடன் நிற்கும் – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைக் காப்பதில் துருக்கியுடன் இணைந்து, உறுதியாக நிற்பதற்கு மலேசியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்ற டத்தோஸ்ரீ அன்வார், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் குரல்களைப் பாதுகாப்பதில் துருக்கி அதிபரின் உறுதியான நிலைப்பாட்டிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

காஸா மக்களின் துன்பங்கள் குறித்து உலகம் இன்னமும் வாய் மூடி மெளனியாக இருந்து விட முடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும், திறன்களையும் பயன்படுத்துவதற்கான அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நிலைப்பாட்டை மலேசியா நிச்சயமாக வரவேற்கிறது, முழுமையாக ஆதரிக்கிறது என்று அன்வார் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்