May 21, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் பயங்கர தீவிபத்து: வெளிநாட்டவர் உயிரிழப்பு - 11 பேர் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் பயங்கர தீவிபத்து: வெளிநாட்டவர் உயிரிழப்பு - 11 பேர் மீட்கப்பட்டனர்

Share:

கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ். லீ பகுதியில் உள்ள மூன்று மாடி கடைக் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து அதிகாலை 2.13 மணியளவில் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 45 வீரர்கள் மற்றும் அதிகாரிகள், தித்திவாங்சா, புடு, செந்தூல் மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் நிலையங்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகாலை 2.25 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, மூன்று மாடி கடைக்கட்டிடம் முழுவதும் தீப்பிடித்திருந்ததாக, அதன் செயல்பாட்டுப் பிரிவுத் தளபதி அஸ்ருல் கைரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 10 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்களை, வீரர்கள் மீட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News