Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அது திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட விபத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அது திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட விபத்து

கோலாலம்பூர், ஜூன்.02-

கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் சமிக்கை விளக்குப் பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒரு காரை மோதி, அதன் ஓட்டுநரான மாது ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்திய சம்பவமானது, அக்காரை மோதிய டொயோட்டா கால்டீனா வாகனமோட்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

டொயோட்டா கால்டீனா ரகக் காரைச் செலுத்திய 57 வயது நபருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காரின் ஸ்டேரிங்கை பிடிக்க இயலாமல் அவரின் கைகள் நழுவின. இந்நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து, அடுத்தச் சாலைக்கு நுழைந்தது என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் முகமட் ஸாம்ஸூரி முகமட் இசா தெரிவித்தார்.

ஜாலான் அம்பாங்கில் உள்ள கிளேனிகல்ஸ் மருத்துவமனையின் முன் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஜேக்கோ 7 ரக வாகனத்தைச் செலுத்திய 49 வயது மாது, காயங்களுக்கு ஆளானார். அவரின் வாகனம் சேதமுற்றதுடன், அவரின் கார் நிலைத்தன்மையை இழந்து பின்னோக்கிச் சென்றதில் இரு கார்களும் சேதமுற்றதாக ஸாம்ஸூரி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை