Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சமூக யதார்த்தையும் மக்களின் பொருளாதாரத் தேவையும் புரிந்து கொள்ளும் அணுகுமுறையும் அவசியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமூக யதார்த்தையும் மக்களின் பொருளாதாரத் தேவையும் புரிந்து கொள்ளும் அணுகுமுறையும் அவசியம்

ஷா ஆலாம், ஜூன்.08-

சிலாங்கூரில் உரிமம் இல்லாத சாலையோர வியாபாரிகள் பிரச்சினையைக் கையாள்வது, அமலாக்க நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், சமூக யதார்த்தங்களையும் மக்களின் பொருளாதாரத் தேவைகளையும் புரிந்து கொள்ளும் அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அட்லி அப்துல்லா மானாஸ் வலியுறித்தினார். சட்டங்கள் நீதியாகவும், அனைவரையும் கண்ணியத்துடன் விதிகளைப் பின்பற்ற அனுமதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உரிமம் வழங்கும் செயல்முறையை எளிதாக்குதல், சட்டபூர்வமான இடங்களின் பற்றாக்குறை, குறைந்த வருமானம் கொண்ட வியாபாரிகளால் ஆரம்ப உரிமக் கட்டணங்களைச் செலுத்த இயலாமை ஆகியவை உரிமம் இல்லாத வியாபாரிகளின் முக்கிய காரணங்களாக அட்லி குறிப்பிட்டார். தற்காலிக உரிமங்கள், தினசரி வணிக பாஸ்களை உருவாக்குவது போன்ற சீர்திருத்தங்களை அவர் பரிந்துரைத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →