கோடை வெப்ப பக்கவாத தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். ஷாரோல் ஐரில் முகமட் ஹெகாக் என்ற அந்த 12 வயது சிறுவன், ஜோகூர், குளுவாங், என்சே, பெசார் ஹஜ்ஜா கல்சொம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அச்சிறுவனின் தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது இரு மகன்களும் , மனைவியும் காய்சலினால் மருந்து உட்கொண்டிருந்த நிலையில் அவர்களை குளிர்சாதன வசதி கொண்ட வரவேற்பு அறையில் உறங்கச் சொன்னதாக தந்தை ஷரோல் அஸ்மி குறிப்பிட்டார். அப்போது பலத்த அலறல் சத்தம் கேட்டு வரவேற்பு அறைக்கு ஓடி சென்று பார்த்த போது தமது இளைய மகன் ஷாரோல் ஐரில் நடுங்கிக்கொண்டு இருந்ததைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதாக தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்துள்ளார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


