Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை என்பது தேர்வுக்குரியது அல்ல, அது நாட்டின் தேவை
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை என்பது தேர்வுக்குரியது அல்ல, அது நாட்டின் தேவை

Share:

கோலாலம்பூர், ஜூன்.02-

தேசிய ஒற்றுமை என்பது இனி ஒரு தேர்வுக்குரியது அல்ல. மாறாக, நாட்டின் நீடித்த தொடர் வளர்ச்சியை உறுதிச் செய்வதற்கு அது, முதன்மை தேவையாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும், மலேசியாவின் முன்னேற்றத்திற்கு ஓர் உந்தும் சக்தியாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே ஒரு வலிமை மிகுந்த நாடாக மலேசியா திகழ முடியும். தேசிய நிலைத்தன்மையும், தேசிய ஒற்றுமையும் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாகும்.

மாறி வரும் சவால்கள் நிறைந்த உலகில், ஒற்றுமை என்பது ஒரு விருப்பமாக அல்லது ஒரு தேர்வு அல்ல, அது ஒரு தேவையாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற உயரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதமர் என்ற முறையில் ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்