Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தேசிய அளவிலான தாதியர் தின கொண்டாட்டம்: துணை சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்
தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான தாதியர் தின கொண்டாட்டம்: துணை சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்

Share:

2026-ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான தாதியர் தின கொண்டாட்டம், மலேசிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை சுகாதாரத்துறை துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஹனிஃபா ஹஜார் தாயிப், அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுமார் 2,200 தாதியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

"நமது தாதியர்கள், நமது எதிர்காலம்: திறன்மிக்க தாதியர்கள் உயிர்களைக் காக்கிறார்கள்" என்ற கருப்பொருளில் இந்தாண்டு விழா அமைந்தது. தாதியர்களின் கல்வி, நல்வாழ்வு மற்றும் தொழில்முறை உரிமைகளில் முதலீடு செய்வது நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் என இவ்விழாவில் துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஹனிஃபா குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பான சுகாதார சேவைக்கு தாதியர்களின் பங்களிப்பும் தியாகமும் இன்றியமையாதது என அவர் நினைவுகூர்ந்தார்.

மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் தாதியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில் முன்னணிப் பணியாளர்களான தாதியர்களின் நல்வாழ்வையும், அவர்களின் மருத்துவச் சேவைத் திறனை மேம்படுத்துவதையும் சுகாதார அமைச்சு எப்போதும் முதன்மையாகக் கருதுகிறது என துணை அமைச்சர் டத்தோ ஹாஜா ஹனிஃபா தமது உரையில் குறிப்பிட்டார்.

நாடெங்கிலும் இருந்து திரளான தாதியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்