Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: விமான நிலையத்திலேயே 279 அந்நிய நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: விமான நிலையத்திலேயே 279 அந்நிய நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.03-

சுற்றுப் பயணிகள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டைச் சேர்ந்த 279 பேர், விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கேஎல்ஐஏவில் நேற்று தரையிறங்கிய அந்த 279 பேர், குடிநுழைவு முகப்பிடங்களைக் கடந்து செல்வதில் தயக்கம் காட்டிய நிலையில், விமான நிலையத்திற்குள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த போது அவர்களின் நடமாட்டம், ரகசிய கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதிக்கு விரைந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அந்த அந்நிய நாட்டவர்களின் பயண ஆவணங்களைச் சோதனையிட்ட போது, அவர்கள் உண்மையிலேயே சுற்றுப் பயணிகள் அல்ல என்பது தெரிய வந்தது.

அவர்கள் நாட்டுக்குள் நுழைவது தடுக்கப்பட்டு, அவர்களின் தாயகத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்