Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லைசென்ஸ் இன்றி வாகனத்தைச் செலுத்திய பாகிஸ்தான் ஆடவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லைசென்ஸ் இன்றி வாகனத்தைச் செலுத்திய பாகிஸ்தான் ஆடவர் கைது

ஷா ஆலாம், ஜூன்.09-

லைசென்ஸின்றி, பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபட்டு இருந்த பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்திய டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இன்று காலை 10.45 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 இல் அந்த ஆடவர் பிடிபட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த பாகிஸ்தான் ஆடவர் பிடிபட்ட போது அவரின் வாகனத்தில் மூன்று பயணிகள் இருந்ததாக ஜேபிஜே சிலாங்கூர் மாநில இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →