Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் துப்பாக்கிச் சூடு: கேளிக்கை மையம் முன் இளைஞர் பலி!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் துப்பாக்கிச் சூடு: கேளிக்கை மையம் முன் இளைஞர் பலி!

Share:

ஜோகூர் பாரு, மே.10-

ஜோகூர் பாரு, ஸ்குடாய் பகுதியில் உள்ள கேளிக்கை மையம் ஒன்றின் முன்னால் நேற்று சனிக்கிழமை இரவு அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 27 வயது உள்ளூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், தப்பியோடிய இரண்டு சந்தேக நபர்களைக் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருவதாக இஸ்கண்டார் புத்ரி காவற்படைத் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவற்படையினர், இது தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News